Wednesday, January 4, 2012

கே.ஈ.சி.டியின் மனித நேய உதவிகள்!

கே.ஈ.சி.டி எனும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையின் சார்பாக புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு ரூபாய்.7000-ம் வழங்கப்பட்டது.

அவ்வாறே வயதான பெண்மணி ஒருவருக்கு மருந்து வாங்க ரூபாய் 1000-ம் வழங்கப்பட்டது.

நோன்பு பிடிக்க இயலாத சகோதரர் ஒருவர் அதற்கு பரிகாரமாக ரூபாய் 3000 தந்து 30 ஏழைகளுக்கு உணவு வழங்க கேட்டுக் கொண்டார். அது 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

உங்களுடைய உதவிகளை கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு வழங்கலாம்.

கீழக்கரை : 04567-245832

சென்னை : 9080424243 / 9444454382

துபை : 050-4985037



Monday, January 2, 2012

கே.ஈ.சி.டியின் ஆலோசனைக் கூட்டம்!

கீழக்கரையில் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை கடந்த 12 வருடமாக செய்து வரும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையின் (கே.ஈ.சி.டி) KILAKARAI EDUCATIONAL AND CHARITABLE TRUST (KECT) நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் (Managing Trustee) பொதுச் செயலாளருமான ஸெய்யது அபூபக்கர் (தொண்டியப்பா) அவர்கள் தலைமையில் கடந்த 31.12.2011 சனிக்கிழமை காலையில் நடைபெற்றது.

இதில் இணைய செயலாளர் ஜமீல் முஹம்மது, ரஃபி அஹ்மது, S.Y.N.ஷிஹாபு, ஃபைரூஸ், இக்பால், அஜ்மல்கான், ஆஸிஃப், அபூபக்கர் ஆலிம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கே.ஈ.சி.டியின் செயல்பாடுகள் குறித்து கூட்டத் தலைவர் ஃபைரூஸ் முன்னிலையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வரும் 2012 வருடத்திற்கான செயல்பாடுகளை சீர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் அபூபக்கர் விளக்கமாக கூறினார்.

 கடந்த 28.12.2012 அன்று அபூபக்கர் (தொண்டியப்பா) தலைமையில் நடத்தப்பட்ட முதல் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
 
நம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையின் நிர்வாகம் கீழ் காணும் முறையில் செயல்படுத்தப்படும்.

மேலாண்மைக் குழு

1) முஹம்மது மன்சூர் (தலைவர்)
2) ஸெய்யது அபூபக்கர் (எ) தொண்டியப்பா (பொதுச் செயலாளர்)
3) S.M.A.ஜமீல் முஹம்மது (இணைச் செயலாளர்)

நிர்வாகத் தலைவர் : அஜ்மல்கான்

பொறுப்பாளர்கள்

1) கல்வி உதவி  மருத்துவ உதவி மற்றும் இதர உதவிகளுக்கு : இன்ஜிநியர் ஜபருல்லாஹ்கான

2) வட்டியில்லா கடனுதவி : அப்துஸ் ஸமது

3) தஃவா (தெருமுனை, ஜும்ஆ மற்றும் பிரசுரங்கள்) : ஆஸிஃப்

4) நன்கொடை, சந்தா மற்றும் இதர வசூல் : ருஸ்தான்

5) தொழுகை மற்றும் கணக்கு வழக்கு பொறுப்பு : அபூபக்கர் ஆலிம்.

நிர்வாகத்தின் குறை நிறைகளை சகோதரர் அஜ்மல்கான் (944 44 54 382) அவர்களிடம் தெரிவிக்கலாம்.

Friday, December 16, 2011

கே.ஈ.சி.டியின் கல்வி உதவிகள்!

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை எனும் கே.ஈ.சி.டி பல்வேறு விதமான சமூகப் பணிகளை கடந்த 2000 முதல் செய்து வருகிறது.

அவ்வரிசையில் கடந்த மாதம் கீழக்கரை 500 பிளாட்டினை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், கிழக்குத் தெருவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கல்வி உதவிகள் ரூபாய் 2200/- வழங்கப்பட்டன.

அவ்வாறே மீனாட்சிபுரத்தை சேர்ந்த சகோதரி ஒருவரின் மருத்துவத்திற்காக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.